Karthigai dates December2023

ஆண்டு      

கார்த்திகை தேதிகள் / கிருத்திகை தேதிகள்


ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
20233JanuaryTuesday
202330JanuaryMonday
202326FebruarySunday
202326MarchSunday
202322AprilSaturday
202319MayFriday
202315JuneThursday
202313JulyThursday
20239AugustWednesday
20235SeptemberTuesday
20233OctoberTuesday
202330OctoberMonday
202326NovemberSunday
202324DecemberSunday



கார்த்திகை தேதிகள் ஜனவரி 2023

கார்த்திகை தேதிகள் பிப்ரவரி 2023

Krithigai மார்ச் 2023

Krithigai ஏப்ரல் 2023


கார்த்திகை தேதிகள் மே 2023

கார்த்திகை தேதிகள் ஜூன் 2023

கார்த்திகை தேதிகள் ஜூலை 2023

கார்த்திகை தேதிகள் ஆகஸ்ட் 2023


கார்த்திகை தேதிகள் செப்டம்பர் 2023

கார்த்திகை தேதிகள் அக்டோபர் 2023

கார்த்திகை தேதிகள் நவம்பர் 2023

கார்த்திகை தேதிகள் டிசம்பர் 2023




ஓவ்வொரு மாதமும் சந்திரன் கார்த்திகை விண்மீன் மண்டலத்தை(ஆறு நட்சத்திரங்களாள் உருவானது) கடந்து செல்லும் நாளே 'கிருத்திகை' அல்லது 'கார்த்திகை' என்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமான் பிறந்தார். ஆகையால் 'கார்த்திகேயன்' என்றும் அழைக்கப்பெற்றார். முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி வழிபடுவது வழக்கம். ஓவ்வொரு மாதமும் கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். தை மாதத்தில் வரும் கிருத்திகை 'தை கிருத்திகை' என அழைக்கப்படுகிறது. தை கிருத்திகை தினத்தில் மக்கள் விரதம் இருந்து, பூஜை செய்து முருகனை வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில் வருவது 'ஆடி கிருத்திகை'. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து புனித தீர்த்தங்களில் நீராடி பால்காவடி, பன்னீர்காவடி ஏந்தி 'அரோஹரா’ என கோஷமிட்டு முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் வருவது 'பெரிய கார்த்திகை' அல்லது 'கார்த்திகை திருநாள்' அல்லது 'கார்த்திகை தீபம்' என்று அழைக்கப்படும். திருக்கார்த்திகை தினத்தன்று பக்தர்கள் விரதம் இருந்து, பூஜை செய்து இறைவனை வணங்குகின்றனர். அன்று மாலை வீடுகளில் விளக்குகள் ஏற்றி நெய்வேத்தியம் செய்து முருகனை வழிபடுவர். திருவண்ணாமலையில், தீபத்திருநாளன்று மலையின் உச்சியில் பரணி தீபம் ஏற்றி சிவபெருமானை வணங்குவர். கிருத்திகை விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.