திருவோணம் தேதிகள், திருவோணம் நாட்கள் 2023

ஆண்டு      

Thiruvonam dates


ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
202322JanuarySunday
202319FebruarySunday
202318MarchSaturday
202314AprilFriday
202311MayThursday
20238JuneThursday
20235JulyWednesday
20231AugustTuesday
202329AugustTuesday
202325SeptemberMonday
202322OctoberSunday
202319NovemberSunday
202316DecemberSaturday


திருவோணம் ஜனவரி 2023

திருவோணம் பிப்ரவரி 2023

திருவோணம் மார்ச் 2023

திருவோணம் ஏப்ரல் 2023


திருவோணம் மே 2023

திருவோணம் ஜூன் 2023

திருவோணம் ஜூலை 2023

திருவோணம் ஆகஸ்ட் 2023



திருவோணம் செப்டம்பர் 2023

திருவோணம் அக்டோபர் 2023

திருவோணம் நவம்பர் 2023

திருவோணம் டிசம்பர்2023




மஹாவிஷ்ணுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவோண நட்சத்திரம். 27 நட்சத்திரகளுள் மிகவும் உயர்த்த நட்சத்திரமாக கருதுவது 'திருவோணம்' மற்றும் திருவாதிரை. தீவிர வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமாதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பூமாதேவியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே உப்பிலியப்பன் கோயிலில் மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர தினத்தை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ் மாதமான ஆவணி மாதத்தை, கேரளாவில் 'சிங்க மாதம்' என்று அழைப்பர். அங்கு சிங்க மாதமே ஆண்டின் தொடக்க மாதமாகும். சிங்க மாதத்தில் வரும் திருவோணம், கேரள மக்களால் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய திருவோண தினத்தில் விரதம் இருக்கவேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் சந்திரதோஷம் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பெறலாம். இந்த விரதம் இருப்போர் கேளர மாநிலம் திருக்காக்கரை விஷ்ணுகோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்க மன்னார் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது வைணவரிகளின் நம்பிக்கை.