பிரதோஷம் தேதிகள் மற்றும் நேரம் 2023 தமிழ் காலண்டர்
பிரதோஷம் தேதிகள் தமிழ் காலண்டர்
ஆண்டு | தேதி | மாதம் | நாள் கிழமை |
---|---|---|---|
2023 | 4 | January | Wednesday |
2023 | 19 | January | Thursday |
2023 | 3 | February | Friday |
2023 | 18 | February | Saturday |
2023 | 4 | March | Saturday |
2023 | 19 | March | Sunday |
2023 | 3 | April | Monday |
2023 | 17 | April | Monday |
2023 | 3 | May | Wednesday |
2023 | 17 | May | Wednesday |
2023 | 1 | June | Thursday |
2023 | 15 | June | Thursday |
2023 | 1 | July | Saturday |
2023 | 15 | July | Saturday |
2023 | 30 | July | Sunday |
2023 | 13 | August | Sunday |
2023 | 28 | August | Monday |
2023 | 12 | September | Tuesday |
2023 | 27 | September | Wednesday |
2023 | 12 | October | Thursday |
2023 | 26 | October | Thursday |
2023 | 10 | November | Friday |
2023 | 24 | November | Friday |
2023 | 10 | December | Sunday |
2023 | 24 | December | Sunday |
பிரதோஷம் ஜனவரி 2023
பிரதோஷம் பிப்ரவரி 2023
பிரதோஷம் மார்ச் 2023
பிரதோஷம் ஏப்ரல் 2023
பிரதோஷம் மே 2023
பிரதோஷம் ஜூன் 2023
பிரதோஷம் ஜூலை 2023
பிரதோஷம் ஆகஸ்ட் 2023
பிரதோஷம் செப்டம்பர் 2023
பிரதோஷம் அக்டோபர் 2023
பிரதோஷம் November 2023
பிரதோஷம் December2023
Pradosham dates for Other Years , Click below
சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப்படும் நாள் பிரதோஷம். மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்ச்சி முறையை வைத்து கணக்கிடப்படுள்ளது. அமாவாசை அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். வளர்பிறையில் வரும் பிரதோஷம் சுக்ல பட்ச பிரதோஷம் ஆகும். பௌர்ணமி அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். தேய்பிறையில் வரும் பிரதோஷம் கிருஷ்ண பட்ச பிரதோஷம் எனப்படும். புராணக் கதையில், செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும்படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது. சிவபெருமான் நீலகண்டனாக மாறினார். இந்த நேரம் தான் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. பிரதோஷ நாள்களில் சிவபெருமானை வழிபட மாலை 4 .30 முதல் 6 .00 மணிவரை மிகவும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று அழைக்கப்படுகிறது. சித்திரை,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கும் , அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பின்பு நந்தி தேவருக்கு தீபாராதனை நடைபெறும். பின் மூலவரான சிவபெருமானுக்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது ஐதீகம்.