பௌர்ணமி தேதிகள் 2023 மாத பௌர்ணமி நாட்கள்
தமிழ் காலண்டர் பௌர்ணமி நாட்கள்
ஜனவரி பௌர்ணமி நாட்கள் 2023
பிப்ரவரி பௌர்ணமி நாட்கள் 2023
மார்ச் பௌர்ணமி நாட்கள் 2023
ஏப்ரல் பௌர்ணமி நாட்கள் 2023
மே பௌர்ணமி நாட்கள் 2023
ஜூன் பௌர்ணமி நாட்கள் 2023
ஜூலை பௌர்ணமி நாட்கள் 2023
ஆகஸ்ட் பௌர்ணமி நாட்கள் 2023
செப்டம்பர் பௌர்ணமி நாட்கள் 2023
அக்டோபர் பௌர்ணமி நாட்கள் 2023
நவம்பர் பௌர்ணமி நாட்கள் 2023
டிசம்பர் பௌர்ணமி நாட்கள் 2023
தமிழ் காலண்டர் ஆண்டு பௌர்ணமி நாட்கள்
சந்திரமானம் எனும் கால கணிப்பின்படி சந்திரன், பூமி, சூரியன் ஓரே நேர்கோட்டில் வரும் பொழுது முழு நிலவு தெரியும், அப்போது நிலவில் இருந்து அதிகப்படியான ஒளி பூமியின் மேல் படும். இந்த நிகழ்வை பௌர்ணமி என்று அழைப்பர். பௌர்ணமி தினத்தில், இந்து சமயத்தினர் பூஜை செய்தும், கோயில்களுக்கு சென்றும் இறைவனை வழிபடுவது வழக்கம். பௌர்ணமியில் சத்ய நாராயண பூஜை மிகவும் பரசித்திபெற்றது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் ஆகிய மலைகளை பௌர்ணமி தினத்தில் வலம் வருவது மிகவும் சிறப்புவாய்த்தது. சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. ஓவ்வொரு பௌர்ணமியும் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை சித்ரா பௌர்ணமி என்பர். சித்ரா பௌர்ணமியில் சிவபெருமானையும், சித்திரகுப்தனையும் வணங்குவர். புஷ்பப்பல்லக்கில் சிவபெருமான் திருவீதிவுலா வந்து அருள்புரிவார். வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் எனப்படும். வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஆனி மாத பௌர்ணமியில் சாவித்திரி விரதமும், ஆடி மாத பௌர்ணமியில் கோபத்ம விரதமும் இருப்பார்கள். கார்த்திகை மாத பௌர்ணமியில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் மஹாவிஷ்ணு ஆகிய தெய்வங்களை கார்த்திகை மாத பௌர்ணமியில் வழிபடுவது வழக்கம். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் தை பூசம் என்று அழைப்பர். தை பூசத்தில் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை வணங்குவர். மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். தமிழர்கள் இயற்கையோடு ஒன்றிணைது கடவுளை வணங்கும் விழாவாக பௌர்ணமியை கொண்டாடுகிறார்கள்.