அமாவாசை தேதிகள் , மாத அமாவாசை பட்டியல் 2023 தமிழ் காலண்டர்

ஆண்டு      

அமாவாசை நாட்கள் அமாவாசை தேதிகள்


ஜனவரி அமாவாசை நாட்கள் 2023

பிப்ரவரி அமாவாசை நாட்கள் 2023

மார்ச் அமாவாசை நாட்கள் 2023

ஏப்ரல் அமாவாசை நாட்கள் 2023மே அமாவாசை நாட்கள் 2023

ஜூன் அமாவாசை நாட்கள் 2023

ஜூலை அமாவாசை நாட்கள் 2023

ஆகஸ்ட் அமாவாசை நாட்கள் 2023


செப்டம்பர் அமாவாசை நாட்கள் 2023

அக்டோபர் அமாவாசை நாட்கள் 2023

நவம்பர் அமாவாசை நாட்கள் 2023

டிசம்பர் அமாவாசை நாட்கள் 2023
இந்துகள் சந்திரனுடைய இயக்கத்தை வைத்து காலத்தை கணித்தனர். அம்முறையில் சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது, சந்திரன் மறைப்பு நிகழும் அதுவே புது நிலவு அல்லது மறைமதி அல்லது அமாவாசை என்று கூறுவர். இந்த புது நிலவு நாளே மாதத்தின் முதல் நாளாக கருதப்படும். இந்துகளின் கலாச்சாரத்தில் அமாவாசை ஒரு முக்கியமான விரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் அமாவாசை தினத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அமாவாசை தினத்தன்று விரதம் இருப்பர். ஓவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஆண்கள், நம் முன்னோர்களுக்கு கருப்பு எள், தரப்பை புல்லை கொண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு நாம், நம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம். இந்து கலாச்சாரத்தின்படி அமாவாசை தினத்தன்று விரதம் மேற்கொண்டு, நம் முன்னோர்களை பூஜை செய்து வணங்குவது மிகவும் நன்று. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வருடத்தின் முதல் அமாவாசை (பொதுவாக ஜனவரி அல்லது பிப்ரவரி) தை மாதத்தில் வருவது தை அமாவாசை. ஆடி அமாவாசை ஆடி (பொதுவாக ஜூலை அல்லது ஆகஸ்ட்) மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் (பொதுவாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்) வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்று கூறுவர். மஹாளய அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றவை. ஓவ்வொரு மாதமும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், மஹாளய அமாவாசை தினத்தில் செய்யலாம்.மஹாளய அமாவாசை அன்று நெய்வைத்தியம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. தர்ப்பணம் செய்து முடித்து பின் புனித நீரில் நீராட வேண்டும். லட்ச கணக்கான மக்கள் கங்கை, யமுனை போன்ற புனித தீர்த்தகளில் தர்ப்பணம் விட்டு நம் முன்னோர்களை வழிபடுவதை இன்றும் நாம் காணலாம்.