சங்கடஹர சதுர்த்தி தேதிகள் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள்
ஆண்டு | தேதி | மாதம் | நாள் கிழமை |
---|---|---|---|
2023 | 10 | January | Tuesday |
2023 | 9 | February | Thursday |
2023 | 10 | March | Friday |
2023 | 9 | April | Sunday |
2023 | 8 | May | Monday |
2023 | 7 | June | Wednesday |
2023 | 6 | July | Thursday |
2023 | 4 | August | Friday |
2023 | 3 | September | Sunday |
2023 | 2 | October | Monday |
2023 | 1 | November | Wednesday |
2023 | 30 | November | Thursday |
2023 | 30 | December | Saturday |
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் ஜனவரி 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் பிப்ரவரி 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் மார்ச் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் ஏப்ரல் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் மே 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் ஜூன் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் ஜூலை 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் ஆகஸ்ட் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் செப்டம்பர் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் அக்டோபர் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் நவம்பர் 2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள் டிசம்பர்2023
சங்கடஹர சதுர்த்தி தேதிகள், ஆண்டு தேர்வு செய்க
முழு முதற்கடவுளான விநாயகருக்கு உகந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை – துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும். விநாயகரை வழிபடுவதின் மூலம் ஒருவர் துன்பத்திலிருந்து விடுபடமுடியும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. சந்திரமானம் எனும் கால கணிப்பின்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. அதாவது தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி. இந்நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து பூஜை செய்வர். விநாயக விரதைகளில் ஒன்றாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி . செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் முக்கியத்துவம் கொண்டது. செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை "அங்கராகி சதுர்த்தி" எனப்படும். மஹராஷ்டிராவிலும், தமிழ் நாட்டிலும் மக்கள் அங்கராகி சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். விநாயகரின் பிறந்தநாளாக கொண்டப்படும் தினம் விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி ஓவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்ப்பிறை சதுர்த்தியில் வரும். விநாயகர் சதுர்த்தியை தவிர மற்ற அனைத்து சங்கடஹர சதுர்த்திகளும் தேய்பிறையில் வரும். விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைப்பார்கள். சங்கடஹர சதுர்தியில் விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் துயில் எழுந்து, நீராடி விநாயகப்பெருமானை வணங்கவேண்டும். அன்று முழுவதும் உண்ணா நோம்பு இருந்து மாலையில் விநாயகரை பூஜை செய்து வணங்கி பின்பும் சந்திரன் வணங்கவேண்டும். விநாயகருக்கு படைத்த உணவை உண்டு, விரதத்தை முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்தால் விரதம் மேற்கொள்பவரின் சகல சங்கடங்களையும் விநாயகர் தீர்த்துவைப்பார்.