தேதி | நாள் | விசேஷம் |
---|---|---|
5 ஜனவரி, 2025 | ஞாயிறு | சஷ்டி |
3 பிப்ரவரி, 2025 | திங்கள் | சஷ்டி |
5 மார்ச், 2025 | புதன் | சஷ்டி |
3 ஏப்ரல், 2025 | வியாழன் | சஷ்டி |
3 மே, 2025 | சனி | சஷ்டி |
1 ஜூன், 2025 | ஞாயிறு | சஷ்டி |
1 ஜூலை, 2025 | செவ்வாய் | சஷ்டி |
30 ஜூலை, 2025 | புதன் | சஷ்டி |
29 ஆகஸ்ட், 2025 | வெள்ளி | சஷ்டி |
28 செப்டம்பர், 2025 | ஞாயிறு | சஷ்டி |
27 அக்டோபர், 2025 | திங்கள் | சஷ்டி |
26 நவம்பர், 2025 | புதன் | சஷ்டி |
25 டிசம்பர், 2025 | வியாழன் | சஷ்டி |
சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க இந்து மத அனுசரிப்பு ஆகும், இது கார்த்திகேயா அல்லது சுப்ரமண்யா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் முருகனின் பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஒவ்வொரு சந்திர மாதத்தின் ஆறாம் நாள் (சஷ்டி) அன்று அனுசரிக்கப்படுகிறது. சஷ்டி குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள மக்களால் போற்றப்படுகிறது மற்றும் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.
சஷ்டி என்பது முருகப்பெருமானின் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். சஷ்டியை நேர்மையுடனும் பக்தியுடனும் கடைப்பிடிப்பதன் மூலம், முருகப்பெருமானின் வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீக பலம் பெறவும், வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கான விரதகளில் ஒன்று ஷஷ்டி. இந்து சமயத்தின் கால கணிப்பின்படி அமாவாசை அடுத்து வரும் ஆறாவது நாள் ஷஷ்டி ஆகும்.
'ஷஷ்டி' என்னும் சொல் சமஸ்க்ருதத்திலிருந்து உருவானது. இது ஆறு என்பதை குறிக்கும். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. முருகபெருமானின் திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவர்; அவரது மந்திரம் ஆறெழுத்து - சரவண பவ; அவரது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவருக்குறிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.
கார்த்திகை மாதத்தில் வரும் ஷஷ்டி மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாத சஷ்டியை "கந்த ஷஷ்டி" என்பர். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். ஷஷ்டியில் விரதமிருந்தால் நம் வினைகளையெல்லாம் தீர்த்து அருள் புரிவார் முருகப்பெருமான். ஆதலால் முருகனை "வினை தீர்ப்பான் வேலவன்" என்றே கூறலாம்.
"ஷஷ்டியிருந்தால் அகப்பையில்வரும்" என்பார்கள். அதாவது குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை வணங்கி ஷஷ்டி விரதமிருந்தால், முருகனின் அருளால் "கர்பப்பையில் குழந்தை உருவாகும்" என்பது அதன் பொருள். இதுவே ஷஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் நம் முன்னோர்கள் கூறியது.