சஷ்டி தேதிகள் 2023

ஆண்டு      

Sashti dates


ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
202327JanuaryFriday
202325FebruarySaturday
202327MarchMonday
202326AprilWednesday
202325MayThursday
202324JuneSaturday
202323JulySunday
202322AugustTuesday
202320SeptemberWednesday
202320OctoberFriday
202318NovemberSaturday
202318DecemberMonday



சஷ்டி தினங்கள் ஜனவரி 2023

சஷ்டி தினங்கள் பிப்ரவரி 2023

சஷ்டி தினங்கள் மார்ச் 2023

சஷ்டி தினங்கள் ஏப்ரல் 2023


சஷ்டி தேதிகள் மே 2023

Sashti dates ஜூன் 2023

சஷ்டி தினங்கள் ஜூலை 2023

சஷ்டி தினங்கள் ஆகஸ்ட் 2023


சஷ்டி தினங்கள் செப்டம்பர் 2023

சஷ்டி தினங்கள் அக்டோபர் 2023

சஷ்டி தினங்கள் நவம்பர் 2023

சஷ்டி தினங்கள் டிசம்பர்2023




தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கான விரதகளில் ஒன்று ஷஷ்டி. இந்து சமயத்தின் கால கணிப்பின்படி அமாவாசை அடுத்து வரும் ஆறாவது நாள் ஷஷ்டி ஆகும். 'ஷஷ்டி' என்னும் சொல் சமஸ்க்ருதத்திலிருந்து உருவானது. இது ஆறு என்பதை குறிக்கும். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. முருகபெருமானின் திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவர்; அவரது மந்திரம் ஆறெழுத்து - சரவண பவ; அவரது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவருக்குறிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. கார்த்திகை மாதத்தில் வரும் ஷஷ்டி மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாத சஷ்டியை "கந்த ஷஷ்டி" என்பர். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். ஷஷ்டியில் விரதமிருந்தால் நம் வினைகளையெல்லாம் தீர்த்து அருள் புரிவார் முருகப்பெருமான். ஆதலால் முருகனை "வினை தீர்ப்பான் வேலவன்" என்றே கூறலாம். "ஷஷ்டியிருந்தால் அகப்பையில்வரும்" என்பார்கள். அதாவது குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை வணங்கி ஷஷ்டி விரதமிருந்தால், முருகனின் அருளால் "கர்பப்பையில் குழந்தை உருவாகும்" என்பது அதன் பொருள். இதுவே ஷஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் நம் முன்னோர்கள் கூறியது.