சிவராத்திரி தேதிகள் 2023

ஆண்டு      

சிவராத்திரி தேதிகள்


ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
202320JanuaryFriday
202318FebruarySaturday
202320MarchMonday
202318AprilTuesday
202317MayWednesday
202316JuneFriday
202315JulySaturday
202314AugustMonday
202313SeptemberWednesday
202312OctoberThursday
202311NovemberSaturday
202311DecemberMonday


சிவராத்திரி ஜனவரி 2023

சிவராத்திரி பிப்ரவரி 2023

சிவராத்திரி மார்ச் 2023

சிவராத்திரி ஏப்ரல் 2023சிவராத்திரி மே 2023

சிவராத்திரி ஜூன் 2023

சிவராத்திரி ஜூலை 2023

ஆகஸ்ட் சிவராத்திரி 2023


சிவராத்திரி செப்டம்பர் 2023

அக்டோபர் சிவராத்திரி2023

சிவராத்திரி நவம்பர் 2023

டிசம்பர் சிவராத்திரி2023
இந்துக்களால் கொண்டாடப்படும் விரதங்களில் ஒன்று சிவராத்திரி. இது சிவனுக்குரிய விரதங்களில் முக்கியமான விரதம். சந்திர சூரிய சுழற்ச்சிப்படி சிவராத்திரி கணக்கிடப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி அடுத்து வரும் 13 - ஆவது நாள் இரவும் 14 -ஆவது நாள் பகலும் சிவராத்திரியை (அதாவது மாத சிவராத்திரி) குறிக்கும். ஓவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறையில்(கிருஷ்ண பட்ச) வரும் சிவராத்திரியை "மகா சிவராத்திரி" என்று அழைக்கப்படும். பல லட்ச பக்தர்கள் விரதம் இருந்து மகா சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். சிவராத்திரியன்று விரதமிருப்போர் மகாசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்த வேண்டும். பின்பு மகாசிவராத்திரியன்று அதிகாலையில் குளித்து, திருநீறு தரித்துக்கொண்டு, சிவாலயம் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும். இரவு முழுக்க கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்துகொள்ளலாம். விரதம் முடித்த மறுநாள் காலையில் நீராடி, சிவனடியார்களோடு சேர்ந்து உணவருந்தி மகாசிவராத்திரி விரதத்தினை நிறைவு செய்துகொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள்வார் சிவபெருமான். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு விலகிவிடும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.