அஷ்டமி நவமி தேதிகள் 2022

ஆண்டு      

அஷ்டமி தேதிகள்


ஆண்டுதேதிமாதம்நாள் கிழமைவிசேஷம்
202210JanuaryMonday (அஷ்டமி )
202226JanuaryWednesday (அஷ்டமி )
20229FebruaryWednesday (அஷ்டமி )
202224FebruaryThursday (அஷ்டமி )
202211MarchFriday (அஷ்டமி )
202225MarchFriday (அஷ்டமி )
20229AprilSaturday (அஷ்டமி )
202224AprilSunday (அஷ்டமி )
20229MayMonday (அஷ்டமி )
202223MayMonday (அஷ்டமி )
20228JuneWednesday (அஷ்டமி )
202222JuneWednesday (அஷ்டமி )
20227JulyThursday (அஷ்டமி )
202221JulyThursday (அஷ்டமி )
20225AugustFriday (அஷ்டமி )
202220AugustSaturday (அஷ்டமி )
20224SeptemberSunday (அஷ்டமி )
202218SeptemberSunday (அஷ்டமி )
20223OctoberMonday (அஷ்டமி )
202218OctoberTuesday (அஷ்டமி )
20221NovemberTuesday (அஷ்டமி )
202217NovemberThursday (அஷ்டமி )
20221DecemberThursday (அஷ்டமி )
202216DecemberFriday (அஷ்டமி )


நவமி தேதிகள்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமைவிசேஷம்





அஷ்டமி

அஷ்டமி என்பது ஒரு வடமொழி சொல். அஷ்ட என்றால் எட்டு என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்சி முறையில் எட்டாவது நாளாக வருவதால் அஷ்டமி என அழைக்கப்பட்டது. நமது மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளான சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அஷ்டமி கணிக்கப்பட்டுள்ளது. அமாவசை, அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி. பௌர்ணமி அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி. அமாவாசைக்கு அடுத்த அஷ்டமியை சுக்கில பட்ச அட்டமி என்றும், பௌர்ணமி அடுத்து வரும் அஷ்டமியை கிருட்ண பட்ச அட்டமி என்றும் அழைக்கின்றனர். இந்துகள், அஷ்டமியில் பல பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி தினத்தில் அவதரித்தார் ஆகையால் இந்நாளையை ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என கொண்டாடுகின்றனர். த்ரிலோசன் அஷ்டமி என்ற பண்டிகையை, ஒடிசா மற்றும் வட இந்தியாவில் அஷ்டமி தினத்தன்று சிவபெருமானை விரதமிருந்து வழிபடுகிறார்கள். மார்கழி மாத கிருட்ண பட்ச அஷ்டமியில் கால பைரவர் அவதரித்தார். இந்நாளை பைரவ அஷ்டமி என்று கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் கேதார கௌரி விரதம் மேற்கொள்கின்றனர். நீலகண்டாஷ்டமி என்பது ஆடி மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியாகும். இந்த நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வர். பொதுவாக அஷ்டமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது.

நவமி

நவமி என்பது ஒரு வடமொழி சொல். நவ என்றால் ஓன்பது என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்சி முறையில் ஓன்பதாவது நாளாக வருவதால் நவமி என்று அழைக்கப்பட்டது. இந்து சமயத்தின் காலக் கணிப்பு முறைகளான சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி நவமி கணிக்கப்பட்டுள்ளது. அமாவசை, அடுத்து வரும் ஓன்பதாவது திதி நவமி. பௌர்ணமி அடுத்து வரும் ஓன்பதாவது திதி நவமி. அமாவாசைக்கு அடுத்த நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமி அடுத்து வரும் நவமியை கிருட்ண பட்ச நவமி என்றும் அழைக்கின்றனர். நவமித் திதியில் வரும் பண்டிகைகள் ராம நவமி, மகா நவமி. சித்திரை மாதம் வளர்பிறை நவமியில் ஸ்ரீ ராமபிரான் பிறந்தார். எனவே சித்திரை மாத வளர்பிறை நவமியை ராம நவமி என்றே அழைத்தனர். இந்த நவமியில் ஸ்ரீ ராமபிரானை வணங்கி வழிபடுவது வழக்கம். மகாநவமி என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவமி. புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் நவமி இது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி மகாநவமி. மகாநவமியை மக்கள் இன்றளவும் கொண்டாடுவதை நாம் காணலாம். பொதுவாக நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது